புரூனேயில் தகாத உறவில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கான புதிய சட்டம் அமுலுக்கு வரவுள்ளது. புரூனேயில் ஷரியத் சட்டம் மிகக் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட்டு வருவதுடன் அங்கு தகாத உறவும் ஓரினச்சேர்க்கையும் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது.
எனினும் இந்த குற்றங்கள் அதிகரித்து வருகின்ற நிலையில் தண்டனையை கடுமையாக்க முடிவு எடுத்த அந்த நாட்டின் மன்னர் இவ்விரு குற்றங்கள் செய்வோருக்கும் மரண தண்டனை விதிக்க உத்தரவிட்டு சட்டம் கொண்டு வந்துள்ளார்.
இந்த தண்டனைகள் வரும் 3ம் திகதி முதல் அமுலுக்கு வருகின்ற நிலையில் இதற்கான முறையான அறிவிப்பை அந்த நாட்டின் சட்டமா அதிபர் அலுவலகம் கடந்த டிசம்பர் மாதம் 29ம் திகதி வெளியிட்டிருந்தது.
அங்கு மரண தண்டனையை குற்றவாளிகள் மீது கல் எறிந்து கொன்று நிறைவேற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் சர்வதேச மன்னிப்பு சபை இந்த புதிய தண்டனைகளை அமுல்படுத்துவதை புரூனே உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.