157
கிளி நொச்சியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வீதி விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் இன்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார். நேற்றுக் காலை எட்டு முப்பது மணியளவில் கிளிநொச்சி ஏ9 வீதி வைத்தியசாலைக்கருகில் இடம்பெற்ற விபத்தில் தலையின் பின்பகுதியில் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிசைக்காக கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிசை பயனளிக்காது உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தந்தையான கிளி நொச்சி தொண்டமான்நகரைச் சேர்ந்த .ராஜ்குமார் என்வரே உயிரிழந்துள்ளார்.
Spread the love