178
இனியேனும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் அமைதியுடன் அனுஷ்டிக்க வேண்டும் என்று வட. மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன் மே மாதம் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து அமைப்புக்களும் இணைந்து புனிதமாகவும் அமைதியாகவும் முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஜெனீவா கூட்டத்தொடரில் தமிழர்களுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசுக்கு தற்காலிக வெற்றி கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ள அவர் எனினும் இறுதியில் நாமே வெற்றியடைவோம் என்றும் தெரிவித்தார். அத்துடன் இந்த விடயம் அரசிற்கும் தெரியும் என்றும் இதனாலேயே அவர்கள் காலத்தை இழுத்தடிப்பு செய்வதாகவும் சிவாஜிலிங்கம் மேலும் கூறினார்.
Spread the love