145
நிகோபார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட லேசான ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதனால் அச்சமடைந்த மக்கள் வீடகிளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த மாதம் அந்தமான் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவிலும், ஜனவரி மாதம் நிகோபார் தீவுகளில் 6.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Spread the love