211
கொத்மலை நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்பட ஆரம்பித்துள்ளன. அண்மைக்காலமாக மலையகத்தில் வறட்சியான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் நீர் நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.
1979 ம் ஆண்டு கொத்மலை அணைக்கட்டு நீர்மாணிக்கப்பட்ட போது பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிக்க விகாரை மற்றும் ஆலயம் என்பன நீரில் மூழ்கியமை யாவரும் அறிந்த ஒன்று.
இந்நிலையில் தற்போது நீர்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்துள்ளமையினால் நீரில் மூழ்கியிருந்த வணக்கஸ்தலங்கள் தென்படுவதுடன் அதனை பார்வையிட பொது மக்கள் வருகை தருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
Spread the love