121
வடக்கு மாகாணத்தில் 3 இலட்சத்துக்கும் அதிகமான பெண்கள் போரினால் பாதிக்கப்பட்டு, அதற்கான நீதி வேண்டியும், குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான வழிவகைகளை வேண்டியும் நித்தம் போராடிக்கொண்டுள்ளனர் என்று வடக்குமாகாணப் பெண்கள் சமாசம் அறிக்கையிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தொடர்பில் அரசிடம் பேசித் தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு கோரி, வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் நேற்று அந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.
நிலைமாறுகால நீதிக்காய் எங்களின் குரல் என்ற தலைப்பில் நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வின்போதே அந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது,
இலங்கையில் போரினால்ப் பாதிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் வட கிழக்கு உட்பட வடமேல் மாகாணத்தில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்
சுமார் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் போரினால் விதவை களாக்கப்பட்டுள்ளனர் என்பதற்கு அப்பால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களி ன் குடும்பங்கள், காணாமற்போன அங்கத்தவர்களின் குடும்பங்கள் தடுப்புக்காவலிலுள்ள அங்கத்தவர்களின் குடும்பங்களின், உறவினர்களும், மாற்றுத்திறனாளிகளாக் கப்பட்டு குடும்பத்தைத் தலைமை தாங்கமுடியாத நிலையிலுள்ள ஆண்களின் குடும்பங்கள், தாய் தந்தையை இழந்த குடும்பத்தைத் தலைமை தாங்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளாய் குடும்ப த்தைத் தலைமை தாங்கும் பெண்கள் என்ற வகைப்பாட்டுக்குள் உள்ள பெண்களென கிட்டத்தட்ட மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட பெண்களும் ஏனைய போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுமாகிய நாம் எமக்கான நீதி வேண்டியும் எங்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கான வழிவகைகளை வேண்டியும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களாய் உங்களிடம் எங்களது வேண்டுகோள்களையும் சிபாரிசுகளையும் மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்கள் சார்பாக முன்வை க்கின்றோம்.
போரினால் பாதிக்கபட்ட பெண்களாக நாம் முப்பது வருடங்களாக துயரை அனுபவித்து வருகின்றோம். கணவரை இழந்து, குடும்பத்தின் அங்கத்தவர்களை இழந்து, ஆண்துணையின்றி ஆதரவற்று வாழும் நலிவுற்ற மக்களாகிய நாங்கள், எங்களது பாதுகாப்பையும், எங்களது பிள்ளைகளின் பாதுகாப்பையும் முதன்மையாகக் கோரி நிற்கின்றோம். எங்களால் எங்களது பிள்ளைகளைத் தனித்து விட்டு தூர இடங்களுக்கு வாழ்வாதார முயற்சிகளில் ஈடுபடச் செல்வது அச்சமாகவுள்ளது.
இராணுவமயமாக்கல் ஒருபக்கம் இராணுவமயமாக்கல் மறுபுறம் அதிகரித்து வரும் இளைஞர்களின் போதைவஸ்துப்பாவனை. நாம் உழைப்பதற்கு ஒருபோதும் அஞ்சுபவர்களல்ல. ஆனாலும் பல வருடங்களாகத் தொடரும் எங்களது மனக்கவலைகளும் ஆரோக்கியமற்ற நிலையும் எங்களை நோயாளிகளாக்கிவிட்டன.
எங்களது உறவுகள் உயிரோடு இருக்கின்றார்களா இல்லையா என்ற ஏக்கமும், விரக்தியும் எம்மீதே எமக்கு அக்கறையில்லாத நிலையை ஏற்படுத்தி விட்டன.
இருந்தும் நாம் எம் பிள்ளைக ளுக்காக வாழ வேண்டியுள்ளது. தொடர்ச்சியான இராணுவ அச்சுறுத்தல்களும் இன்றும் நாமும் காணாமலாக்கப்பட்டோரும் இணைந்து நடத்தும் கூட்டங்களுக்கும், ஆர்ப்பாட்டங்களுக்கும் சென்று வந்ததாலும் எம்மைப் பற்றிய தகவல்கள் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால் சேகரிக்கப்படுகின் றன.
எங்களது உறவுகள் எங்கு உள்ளார்கள் என்றும் எமக்கு தெரியவில்லை.எங்களது வாழ்வாதாரத்துக்கான காணிகளையும் சட்ட முறைப்படி பெற்றுக்கொள்ள முடியவில்லை.
எங்களது முறைப்பாடுகளுக்கு சரியான பதிலும் நீதியும் எமக்கு கிடைக்கப்பெற வில்லை.வாழ்வதற்கு வீடும் இல்லை வாழ்வாதாரத்தினை மேற்கொள்ளவும் முடியவில்லை.
நிலைமாறுகால நீதியின் கீழ் பால் நிலைக் கண்ணோட்டத்துடன் எங்களை அணுகுங்கள். நிலைத்திரு க்கக்கூடிய வாழ்வாதார முயற்சிகளி னை வழங்க எற்பாடுகளினை முன்மொழி யுங்கள். நாங்களும் மனிதர்கள்தான். எங்களது குடும்பம் பட்டினியாகக் கிடக்கும்போது எங்களது மனங்கள் பதறுகின்றன.
எவ்வளவு வருடங்கள்தான் நாம் பொறுப்பது? எனவே இந்த இடத்தில் உங்களிடம் கேட்கின்றோம் அனைத்துப் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்களாய் எமக்கான நீதியினைத் தாமதமின்றிப் பெற்றுத் தாருங்கள். நாமும் இந்நாட்டுப் பிரஜைகளே என்றுள்ளது
Spread the love