இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் இந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய 687 பக்கங்களை நீக்கியள்ளதாக முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகமற்ற நடத்தை கொண்டிருந்த காரணத்தால் இந்த பக்கங்கள் தனது சமூக வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் 300 மில்லியன் முகப்புத்தக பயனாளர்கள் உள்ளநிலையில் ஒரு பிரபலமான கட்சிக்கு எதிரான கடுமihயன ஒரு நடவடிக்கையை முகப்புத்தக நிறுவனம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
விசாரணைகளின் போது தனிநபர்கள் சிலர் போலி கணக்குகளை ஆரம்பித்து வௌ;வேறு குழுக்களில் இணைந்து தங்களது கருத்துக்களை பரப்பி தமது என்கேஜ்மென்டை அதிகரித்துக் கொண்டதனை கண்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
என்கேஜ்மென்ட் என்பது ஒரு பதிவிற்கு பயனாளர்களின் எண்ணப்பாடு , கருதது, பகிர்தல் ஆகியவற்றை குறிக்கும்.
இது போன்ற ஒருங்கிணைக்கப்பட்ட நம்பகத்தன்மையற்ற நடத்தையில் ஈடுபட்ட நபர்கள் தங்களது அடையாளத்தை மறைக்க முயற்சித்துள்ளார்கள் எனவும் அவர்கள் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்துள்ளோம் எனவும் முகப்புத்தக நிறுவனத்தின் இணைய பாதுகாப்பு கொள்கையின் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த பக்கங்களை நீக்கியதற்கு காரணம் அந்நபர்களின் நடத்தையே எனவும் அவர்கள் இட்டிருக்கும் பதிவுகளுக்காக இப்பக்கங்கள் நீக்கப்படவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
பிரதமர் மோதியின் முன்னெடுப்புகளை விமர்சித்தும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை ஆதரிக்கச் சொல்லியும் பதிவுகள் இடப்பட்டிருந்ததை முகப்புத்தக நிறுவனத் உதாரணம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது