அமெரிக்காவிடம் இருந்து 14 கோடி பெறுமதியான 24 ரோமியோ ரக ஹெலிகொப்டர்களை கடந்த ஆண்டு வாங்குவதற்கு இந்திய பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ள நிலையில் அவற்றினை அமெரிக்காவிடம் இருந்து வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பில் சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாட்டின்போது பிரதமர் மோடியும், அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இந்தியாவிற்கு தற்போது 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.
ரோமியோ ஹெலிகாப்டர்கள் கடலில் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளிலும், அவசர காலங்களில் கப்பலுடன் இணைத்து பயன்படுத்தவும் உதவதுடன் பிரித்தானியாவின் பழைய கடல் கிங் ஹெலnpகாப்டர்களில் இல்லாத புதிய நுட்பங்கள் பல இவற்றில் உள்ளதாகவும் அவற்றிற்கு மாற்றாக இந்த ரோமியோ ஹெலிகொப்டர்கள் உபயோகிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது