கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது கட்சியிலிருந்து இரண்டு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கி உள்ளார். அவர்கள் இருவரும் எஸ்.என்.சி-லாவ்லின் எனும் ஒரு பெருநிறுவனத்திற்கு எதிரான குற்றவியல் விசாரணையில் ஜஸ்டின் தலையிடுகிறார் என குற்றஞ்சாட்டி, அதனை அம்பலப்படுத்தியவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜோடி வில்சன் மற்றும் ஜானெ பில்போட் ஆகிய இரண்டு குறித்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜஸ்டின் அரசு மீது குற்றம் சுமத்தி பதவிவிலகியுள்ள நிலையில் தற்போது அவர்கள் ஜஸ்டினின் தாராளவாத கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ஒரு முறைகேட்டை அம்பலப்படுத்திய இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நீக்கியதன் மூலம் ஜஸ்டின் நீதிக்கு துரோகம் இழைத்துவிட்டார் என எதிர்க்கட்சி தலைவர் அண்ட்ரூ ஸ்சேர் குற்றம் சுமத்தியுள்ளார்.
லிபியாவில் சில தொழில் ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அந்நாட்டு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக எஸ்.என்.சி-லாவ்லின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது