Home இலங்கை சிறைச்சாலைகளில் போதையை கட்டுப்படுத்தினால், 75 வீதமான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும்..

சிறைச்சாலைகளில் போதையை கட்டுப்படுத்தினால், 75 வீதமான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும்..

by admin

சிறைச்சாலைகளில் போதைப்பொருள் உள்ளிட்டவைகளைக் கட்டுப்படுத்தப்படுமாக இருந்தால் நாட்டில் 75 வீதமான குற்றச்செயல்களைத் தடுக்க முடியும் என யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதம சிறை காவலர் என். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ஏப்ரல் 3 போதையற்ற நாடு எனும் தொனிப்பொருளிளான சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் சிறைச்சாலை வளாகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றிய,  யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் பிரதம காவலர் என்.பிரபாகரன்  தெரிவிக்கையில்,  “நாம் இன்றைய தினம் போதைப் பொருளை ஒழிப்போம் போதை பொருளை கட்டுப்படுத்துவோம் என்னும் தொனிப்பொருளில் சத்திய பிரமாணத்தை மேற்கொண்டுள்ளோம். எனினும் அந்த சத்திய பிரமாணத்தை வாயளவில் நாங்கள் உச்சரித்துவிட்டு செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

எனவே நாம் சிறைச்சாலைக்குள் இந்த போதை பொருளை ஒழிப்போம் ஆக இருந்தால் நாட்டில் 75 வீதமான குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த முடியும் என நான் நம்புகின்றேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வானது யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் உதவி அதியட்சகர் எம்.எல்.மலின் லோவின் ஆலோசனையில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்ச்கர் எம்.எப்.லாகீரின் வழிகாட்டலில் யாழ்ப்பாண சிறைச்சாலையின் பிரதான காவலர் என்.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More