162
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் எஸ்.கே.16 என்ற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, பிரபல இயக்குநரும், நடிகருமான பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் 5 திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படம். சின்னத்திரையில் வலம் வந்த சிவகார்த்திகேயனை மெரீனா படம் மூலம் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய பாண்டிராஜின் படத்தில்தான் நடிக்கின்றார்.
மெரினா திரைப்படத்தைத் தொடர்ந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்திலும் இந்த கூட்டணி இணைந்தது. தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாரதிராஜா ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு தாத்தா அல்லது அப்பாவாக பாரதிராஜா நடிக்கலாம் எனப்படுகின்றது. பாரதிராஜா தற்போது, சுசீந்திரன் இயக்கிவரும் ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கபடியை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love