குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், பிரான்ஸ் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நேற்று வியாழக்கிழமை மாலை மன்னார் ஆயர் இல்லத்தில் நடை பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட மனித புதைக்குழி தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக மன்னார் மாவட்ட மாணவ மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து வரலாற்று சிறப்பு மிக்க மடு அன்னையின் திருத்தலத்திற்கும் உயர்ஸ்தானிகர் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.