நியூசிலாந்தின் கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட குற்றவாளி 50 கொலை குற்றச்சாட்டுகளையும் 39 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுக்களையும் நீதிபதி பதிவு செய்துள்ளார்.
மேலும் 36 பேரை கொலை செய்ய முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது எனவும் இந்த வழகில் அவருக்கு பிணை வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நியூஸிலாந்தில் கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள இரு மசூதிகளில் கடந்த மாதம் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் மக்கள் மீது அங்கு வந்த இனந் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் 50 பேர் கொல்லப்பட்டதுடன பலர் காயமடைந்திருந்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் முக்கியக் குற்றவாளியான அவுஸ்திரேலிய பிரஜையான பிரெண்டன் டாரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகின்ற நிலையில் அவரை நேற்றையதினம் மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்மீது 50 கொலை குற்றச்சாட்டுகளையும், 39 கொலை முயற்சி குற்றச்சாட்டுகளையும் நீதிபதி பதிவு செய்துள்ளார்.
முன்னதாக, மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து பகுதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
00