டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரான மாகந்துரே மதூ{டன் கைதுசெய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வான் ரூயன் உள்ளிட்டோர் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் ஐவரில் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
ரயன் வான் ரூயன்னுடன் மேலும் நால்வர் டுபாயில் இருந்து புதன்கிழமை இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் குறித்த ஐவரிடமும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவினரும் காவல்துறைப்போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் இணைந்து விசேட விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சுமார் 18 மணிநேர விசாரணையின் பின்னர் வெலிகம காவல்துஐறயினரிடம் ஒப்படைக்கப்பட்ட நடிகர் ரயன் வான் ரூயன உள்ளி;டோர் இன்றையதினம் மாத்தறை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது