167
யாழ் மாவட்டத்தின் பிரதிக்காவல்துறைமா அதிபராக புதிதாக கடமையேற்றுள்ள ராஜித ஸ்ரீ தமிந்த ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை இன்று (05) ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது இருவருக்குமிடையில் யாழ்மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது வன்செயல்கள் அதிகரித்து காணப்படும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதிகளில் அதிக காவல்துறைக் கண்காணிப்பினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் பிரதிக்காவல்துறைமா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.
Spread the love