பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை 7ம் திகதி விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் விடுவிக்கப்படும் மீனவர்கள் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் உள்ள 385 இந்திய மீனவர்களையும், 10 கைதிகளையும் விடுவிக்குமாறு டெல்லியிலுள்ள பாகிஸ்தான் உயர் ஆணையகத்திடம் இந்திய அரசு அண்மையில் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் சிறைகளில் 385 இந்திய மீனவர்கள் உள்ளனர். அவர்களையும், அவர்களது படகுகளையும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டுவர அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு; வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதத்தில் மொத்தம் 360 கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது எனவும் வாரத்திற்கு 100 கைதிகள் என்ற அடிப்படையில் ஏப்ரல் 29ஆம் திகதி அனைத்து கைதிகளும் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது
விடுவிக்கப்படும் 360 மீனவர்களில் 355 பேர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.