மாகாண சபைத் தேர்தலை, எந்தச் சட்டத்தின் கீழ் நடத்தமுடியும் என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தினைக் கோருமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையினை கடிதம் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறசேனாவிடம் விடுத்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலை, எந்த சட்டத்தின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில், சட்டரீதியிலான சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதால், அதனைத் தெளிவுப்படுத்திக் கொள்வதற்கே மேற்படி கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நிலைமையை ஏற்படுத்தி கொடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான இயலுமையும் ஜனாதிபதிக்கே உள்ளதெனவும் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தினை ஜனாதிபதியால் மட்டுமே பெற்றுக்கொள்ளப்படமுடியும் என்பதனால் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.