192
பாதாளக் குழு, போதைவஸ்து வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச்சாட்டுகளின் கீழ் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை பூஸா சிறைச்சாலைக்கு இடமாற்ற நீதிமன்றம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் மாதங்களுக்குள் கைதிகளை பூஸா சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை குற்றவிசாரணைப் பிரிவினரின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட பூஸா சிறைச்சாலையானது கடந்த வாரம் சிறைச்சாலைகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love