நாளை நள்ளிரவு முதல் மின் துண்டிப்பு முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சக்தி அமைச்சில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் மின்சாரத்தை தனியார் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்வதினால் மின் கட்டணம் அதிகரிக்கும் என ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்தி தவறு எனவும் தனியார் துறையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது இலாபகரமானது எனவும் குறிப்பிட்டார்.
மேலும் நுரைச்சோலையில் இரண்டும் திருகோணமலையில் ஒன்றுமாக புதிதாக மூன்று அனல் மின்சார நிலையங்கள் வரவுள்ளதாக தெரிவித்த அவர் இந்த மூன்று மின் நிலையங்களும் 2025 இல் அல்லது அதற்கு முன் செயற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை வீட்டுப்பாவனையாளர்களுக்கான மின் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது எனத் தெரிவித்த அமைச்சர், முடிந்தால் அது 2021 ஆம் வருடமளவில் குறைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.