கொங்கொங்கில் சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து உள்நாட்டு ஒத்துழையாமை இயக்கம் ஒன்றில் பங்கேற்றமை தொடர்பில் ஜனநாயக ஆதரவு செயற்பாட்டாளர்கள் 9 பேரின் குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனையடுத்து அவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு இடையூடு ஏற்படுத்தியதாக தெரிவித்தே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
இதில் மூன்று முக்கிய செயற்பாட்டாளர்கள் ஹொங்காங் ஜனநாயக ஆதரவு இயக்கத்தின் முன்னணி தலைவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
2014ம் ஆண்டு நடைபெற்ற அம்ப்ரல்லா இயக்கத்தில் பங்கேற்று தங்களுடைய தலைவரை தாங்களே தேர்ந்தெடுப்போம் எனக் கோரி ஆயிரக்கணக்கானோர் நடத்திய போராட்டத்தால் ஹொங்காங்கின் மத்திய பகுதி பல வாரங்களாக முடங்கியிருந்தது இதில் பங்கேற்றமைக்காகவே இவ்வாறு அவர்கள் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.
60 வயதாகும் சமூகவியல் பேராசிரியர் சென் கின்-மேன், 54 வயதாகும் சட்ட பேராசிரியர் பென்னி தாய், 75 வயதாகும் பேப்டிஸ்ட் மதப்பிரிவு ஊழியர் ச்சு யியு-மிங் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டோரில் அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது