206
கிளிநொச்சி மாவட்ட பெண்கள் சதுரங்க அணி முதலாம் இடத்தையும் ஆண்கள் சதுரங்க அணி இரண்டாம் இடத்தினையும் பெற்றுச் சாதனைப்படைத்துள்ளன. வடக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட மாகாண மட்ட சதுரங்கப் போட்டியில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணி சம்பியனாகி சாதனை படைத்துள்ளது.
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இதன்மூலம் எதிர்வரும் யூலை மாதம் நடைபெறவுள்ள தேசிய மட்டப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்குபற்றும் வாய்ப்பினையும் பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் கடந்த 5ம், 6ம் திகதிகளில் நடைபெற்ற போட்டியில் மாவட்ட மட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி , வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஐந்து அணிகள் பங்குபற்றிய இப் போட்டியானது “றவுண்ட றொபின்” முறையில் நடைபெற்றது. அனைத்து அணிகளும் மற்றைய அனைத்து அணிகளுடனும் விளையாடின.
இதில் கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அணியானது மற்றைய நான்கு மாவட்ட அணிகளையும் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக இரண்டாம் இடத்தைப் பெற்ற இவ் அணி இம்முறை சம்பியனானது குறிப்பிடத்தக்கது.இப்போட்டியில் இரண்டாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்ட அணியும் மூன்றாம் இடத்தை மன்னார் மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டன.ஆண்கள் அணிக்கான போட்டியில் முதலாம் இடத்தை யாழ்ப்பாண மாவட்ட அணியும் இரண்டாம் இடத்தை கிளிநொச்சி மாவட்ட அணியும் மூன்றாம் இடத்தை முல்லைத்தீவு மாவட்ட அணியும் பெற்றுக்கொண்டன.
கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கமானது மீள் குடியேற்றத்தின் பின்னர் முனைப்புடன் செயற்பட்டு மாவட்ட மட்டத்தில் பல்வேறு போட்டிகளை நடத்திவருவதுடன் தேசிய மட்டப் போட்டிகளிலும் தமது மாவட்ட சதுரங்க வீரர்களை பங்குபற்றச்செய்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Spread the love