பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 31 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளமையினால் இதனால் அந்த நகரத்திலுள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் வீதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழையின் போது பலத்த காற்று வீசியதில் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதுடன் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளதனால் மின் இணைப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்டவையும் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை இழந்த மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கிடையில் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதிலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீட்பு குழுவினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது