ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பிரெக்ஸிற் திட்டத்திற்கு, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதிவரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரெக்ஸிற் கால நீடிப்பு தொடர்பாக பிரசல்ஸில் நேற்று கூடி ஆராய்ந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒக்டோபர் 31 வரை காலநீடிப்பை வழங்க ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்pன் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளர். ஐந்து மணிநேர நீண்ட பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெமரிவித்துள்ளார்.
பிரெக்ஸிற் திட்டம் தொடர்பாக பாராளுமன்றில் பிரதமர் தெரேசா மே முன்வைத்த முன்மொழிவுகள் யாவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டதைப் போன்று கடந்த மார்ச் 29ஆம் திகதி பிரெக்ஸிற் இடம்பெறாத நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிவரை காலநீடிப்பை வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரதமர் மே கோரியிருந்த நிலையில் இவ்வாறு கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது