குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த 2016,2017.2018 ஆகிய ஆண்டுகளில் சுற்றுநிருபங்களின் அடிப்படையிலேயே உரமானியம் வழங்கப்பட்டது. என மாவட் ஒருகிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட கமநல உதவி ஆணையாளர் ஆயகுலன் தெரிவித்துள்ளார்
உரமானியம் வழங்குவதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது. என்றும் அரச அலுவலர் ஒருவர் முறைகேடாக உர மானியத்தை பெற்றார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன. இது தொடர்பில் உரிய பதிலளிக்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவின் செயலாளர் ஜீவநாயகம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய போதே உதவி ஆணையாளர் இவ்வாறு பதிலளித்தார்.
மேற்படி ஆண்டுகளில் எமது திணைக்களம் சுற்று நிருபங்களுக்கு அமைவாகவும், மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டங்களின் தீர்மானத்திற்கு அவைாகவுமே உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் காணி உரிமையாளர்கள் இல்லாத போது பயிர்ச்செய்கை மேற்கொள்பவர்களுக்கு உர மானியம் வழங்கப்பட்டுள்ளது. அது சுற்று நிருபத்திற்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டது.
2016 இல் உர மானியம் வழங்குவதில் முறைகேள் இடம்பெற்றிருந்தால் 2017 இல் முறையிட்டிருக்க வேண்டும் 2017 முறைகேள் இடம்பெற்றிருந்தால் 2018 முறையிட்டிருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு எந்த முறைபாடுகள் கிடைக்கப்பெறவில்லை.
இந்த நிலையில் 2019 இல் மேற்படி ஆண்டுகளில் உரமானியம் வழங்கல் நடவடிக்கைகளில் முறைகேடுகள் என முறைப்பாடு செய்யப்பட்டது அதனை நாம் விசாரித்துள்ளோம். இருப்பினும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை தெரியவரவில்லை என அவர் தெரிவித்தார்.