ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசான்ஜேயை லண்டன் காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். அமெரிக்க ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியிட்ட ஜூலியன் அசான்ஜேயை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தமையினால் அவர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்தார்.
ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டில் குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தநிலையில், லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த ஜூலியன் அசாஞ்சேவை பிரித்hனிய ; காவல்துறையஙினர் லண்டனில் இன்று கைது செய்துள்ளனர்.
ஈக்வடார் அரசு அவருக்கு அளித்து வந்த பாதுகாப்பை வாபஸ்பெற்ற நிலையில் அசாஞ்சேவை கைது செய்த லண்டன் காவல்துறையினர் அவரை வெஸ்ட் மிண்ட்ஸ்டர் நீதிமன்pறல் முன்;னிலைப்படுத்தியுள்ளனர். ஆஜர்படுத்தினர்.
2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.