66 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் கருக்கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என தென்கொரிய அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்கொரியாவில் கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகின்ற நிலையில் அங்கு 1953-ம் ஆண்டு முதல் கருக்கலைப்பு தடைச் சட்டம் அமுலில் உள்ளது. இந்தச் சட்டத்தின்படி தடையை மீறி கருக் கலைப்பு செய்துகொள்ளும் பெண்களுக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனையும், கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களுக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்படுகிறது.
அதே சமயம் ஒரு பெண் வன்புணர்வுக்குட்பட்டு; கரு உருவாகி இருந்தாலோ அல்லது வயிற்றில் இருக்கும் கருவால் தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்திலோ மட்டும் கருக்கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த கருக்கலைப்பு தடைச்சட்டம் பெண்ணுரிமைக்கு எதிரானது எனத் தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் இந்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என நீண்டகாலமாக போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில், கருக் கலைப்பு தடைச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அடுத்த ஆண்டு (2020) இறுதிக்குள் இந்தச் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவு;, அந்த காலக்கெடுவுக்குள் திருத்தியமைக்கப்படவில்லை என்றால் அந்தச் சட்டம் செயலற்றதாகும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டு;ளது