Home பிரதான செய்திகள் கொல்கொத்தாவை 7 விக்கெட்டுகளால் டில்லி வென்றுள்ளது

கொல்கொத்தாவை 7 விக்கெட்டுகளால் டில்லி வென்றுள்ளது

by admin


12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 26 ஆவது லீக் போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியை டில்லி கப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.  நேற்றிரவு கொல்கொத்தாவின் ஈடன்கார்டன் மைதானத்தில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியில் டினேஸ் கார்த்திக் தலைமையிலான கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டில்லி கப்பிட்டலஸ் அணியும் போட்டியிட்ட நிலையில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற டில்லி கப்பிட்டல்ஸ் அணி களத்தடுப்பினை தெரிவு செய்தது.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது.இதனையடுத்து 179 ஓட்டங்கள் என்ற வெற்றிஇலக்குடன் களமிறங்கிய டில்லி கப்பிட்டலஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 பந்துகள் மீதமிருக்க 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

கொல்கத்தா அணி, 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பெற்றுளள அதேவேளை 6 போட்டிகளில் விளையாடிய டில்லி கப்பிட்டல்ஸ் 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

இப்போட்டியின் ஆட்டநாயகனாக டில்லி கப்பிட்டல்ஸ் அணியின் சிகர் தவான் தெரிவுசெய்யப்பட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More