அமெரிக்காவில் சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என அந்நாட்டு நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் பொம்மைகள் தயாரிப்பில் பிரபலமான பிஷர் பிரைஸ் நிறுவனம், குழந்தைகள் படுத்து உறங்குவதற்கான நவீன தொட்டில்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
2009-ம் ஆண்டு ரொக் என் பிளே சிலிப்பர்ஸ் என அழைக்கப்படுகின்ற இந்த நவீன தொட்டில்களை சந்தையில் அறிமுகம் செய்த நாள் முதல் அவற்றில் படுத்து உறங்கிய 30 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ள நிலையில் குறித்த நவீன தொட்டில்களின் பாதுகாப்புத்தன்மை கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் இதுகுறித்து அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையகம் விசாரணை மேற்கொண்டது.
இதன்போது பிறந்து 3 மாதங்களே ஆன 10 குழந்தைகள், அந்த நவீன தொட்டிலில் படுத்து உறங்கியபோது, திரும்பிப்படுக்க முயன்ற போது உயிரிழந்துள்ளதனை தங்கள் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையகம் சந்தையில் உள்ள 50 லட்சம் நவீன தொட்டில்களை திரும்பப்பெற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.