தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது
தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சா{ஹ அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்னதாக, வாக்காளர் களுக்கு அமைதி ஏற்படுத்தும் நோக்கத்துடன், பொதுக்கூட்டங் கள், பேரணிகள் வாயிலாக தேர்தல் பிரச்சாரம் ஆகியவை தடை செய்யப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நிபந்தனைகளை மீறுவோருக்கு 2 ஆண்டு சிறைத் தண் டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தபின், நட்சத்திரப் பேச்சாளர்கள், மற்ற அரசியல் தலைவர்கள், செய்தி யாளர்கள் சந்திப்பு மற்றும் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தல் போன்றவற்றில் பங்கேற்று, தேர்தல் தொடர்பான விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது