180
பின்லாந்தில் நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் அந்நாட்டின் இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக் கட்சியின் தலைவர் அன்ரி றின்னே (Antti Rinne ) இதனை அறிவித்துள்ளார்.
தேர்தலில் எதிர்க்கட்சியான சமூக ஜனநாயகவாதிகள் தரப்பினர் 17.7 சதவிகித வாக்குகளையும் யூரோ செப்டிக் பின்ஸ் கட்சி 17.5 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
99.5 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பிரதமர் ஜூஹா சிபிலா மற்றும் அவருடன் கூட்டிணைந்துள்ள வலதுசாரி தேசிய கூட்டணி ஆகியன 13.8 சதவிகித வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love