2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் விபத்துக்குள்ளாகி உருகிய ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கரு எரிபொருளை அகற்றும் பணியின் அந்த அணு உலையை இயக்கிய நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
மூன்றாம் எண் அணு உலைக்கு அருகே உள்ள எரிபொருள் இருப்பு வைக்கும் இடத்தில் இருந்து, எரிபொருள் அணுக்கருக்களை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் கருவி மூலம் வெளியில் எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
2011-ம் ஆண்டு சுனாமியை அடுத்து உலகில் நடந்த மிகப் பெரிய அணு உலை விபத்துகளில் ஒன்றாக கருதப்படும் புகுஷிமா அணு உலை விபத்து, மிகப்பெரிய அணுக் கதிர்வீச்சு மாசுபாட்டைத் தோற்றுவித்திருந்தது.
இந்தப் பகுதியில் இருந்து அணு எரிபொருளை அகற்றும் பணி நிறைவடைய இரண்டு ஆண்டுகள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.