எகிப்து ஜனாதிபதி அப்துல் பதா அல்-சீசீ, 2030 ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அப்துல் பதா அல்-சீசீயின் இரண்டாவது, நான்காண்டு பதவிக்காலம் 2022ஆம் ஆண்டில் முடிவடையவுள்ள நிலையில் இவ்வாறு பதவியில் நீடிக்க வழிவகுக்கும் சட்ட திருத்தங்களுக்கு அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த சட்டத்திருத்தம் அவரின் பதவிக் காலத்தை ஆறு ஆண்டு காலமாகவும், அவர் மூன்றாவது முறை போட்டியிடவும் வழிவகை செய்யும் அதேவேளை சட்டத்திருத்தம் குறித்து கருத்து கேட்கும் வாக்கெடுப்பை முப்பது நாட்களுக்குள் நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த சட்டத்திருத்தம் ஜனாதிபதிக்கு நீதித்துறையில் அதிக அதிகாரங்களையும், அரசியலில் ராணுவத்தின் தலையீட்டை நிலைநிறுத்தவும் வழிவகுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2014ஆம் ஆண்டு முதன்முதலில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சீசீ, அதன்பின் கடந்த வருடம் வரும் 97 வீத வாக்குகளுடன் மீண்டும் ஜனாபதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது