சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் மாலை ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும் பணியில் அதிகளவான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்ததீவிபத்தில் ஏற்பட்ட புகையால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 78 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது