முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நேற்று புதன்கிழமை இரவு திடீர் பயணமொன்றினை மேற்கொண்டுள்ளார். வைத்தியசாலையில் நிலவும் சில குறைபாடுகள் தொடர்பாக மக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகள் குறித்து ஆராயும் பொருட்டே ஆளுநத் இவ்வாறு திடீரென வைத்தியசாலைக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு திடீர் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார் என்பது கறிப்பிடத்தக்கது