ஜம்மு காஷ்மீருக்கும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கும் இடையேயான வர்த்தகத்தை நிறுத்துமாறு நேற்று (ஏப்ரல் 18) மத்திய உள்துறை அமைச்சு உத்தரவு வெளியிட்டுள்ளது. இரு பகுதிகளுக்கும் இடையேயான வர்த்தகம் பாகிஸ்தானைச் சேர்ந்த சிலரால் பயங்கரவாதத்துக்காகப் பயன்படுத்தப்படுவதாக தெரிவித் தே இவ்வாறு நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது
எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடைபெறும் வர்த்தகத்தை பாகிஸ்தானை சேர்ந்த சில சக்திகள் சட்டவிரோத ஆயுதங்கள், போதை பொருட்கள் மற்றும் சட்டவிரோதப்பணம் ஆகியவற்றுக்காக பயன்படுத்துவதாக இந்திய அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்வேறு நிர்வாகங்களுடன்; ஆலோசனை நடத்தப்பட்டு வர்த்தகத்தை மீண்டும் திறப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.