வடக்கு நைஜீரியாவில் கூட்டுப் படைகளின் மீது தாக்குதல் நடத்திய 50க்கும் மேற்பட்ட போகோ ஹாரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது. நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் தமது நாட்டின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து பன்னாட்டு கூட்டுப் படையுடன் நைஜீரிய ராணுவமும் இணைந்து சண்டையிட்டு வருகிறது.
நேற்று முன்தினம் போகோ ஹாரம் படைகளுக்கு எதிராக பன்னாட்டுக் கூட்டுப் படைகளுடன் சாடி, கமரூன், நைஜர் மற்றும் நைஜீரிய ஆகிய நாடுகளுடன் இணைந்து தாக்குதல் மேற்கொண்டதில் 52 போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டள்ளனர் என நைஜீரிய ராணுவ செய்தித் தொடர்பாளர் கலோனல் ஆஸெம் பெர்மான்டோவா தெரிவித்துள்ளார்.
இதில் 11 ராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் எனவும் இம் மோதலின் போது தீவிரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதம் ஒன்றும் ஏராளமான சிறிய ரக ஆயுதங்கள் அடங்கிய வாகனம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சுமார் 10 ஆண்டுகளாக வடகிழக்கு நைஜீரியாவின் மையப்பகுதியில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இமட் மோதலில் இதுவரை 27 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதுடன் 1.8 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது