கனடாவில் அமைந்துள்ள கனடியன் ராக்கீஸ் என அழைக்கப்படும் மலைப்பகுதியில், மலையேறுபவர்கள் மூன்று பேர் பனிப்புயலில் சிக்கி உயிரிழந்திருக்கக் கூடும் என நம்பப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹவுஸி மலை உச்சியை ஏற முயன்ற குறித்த மூன்று பேரும் சரியான நேரத்தை கடைபிடிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏறிய பகுதிகளில் விமானம் மூலம் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ள தேசிய பூங்கா ஊழியர்கள், பனிப்புயல் மற்றும் அதில் சிக்கியிருந்த சில மலையேறும் உபகரணங்களைக் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை அங்கு தொடரும் மோசமான காலநிலை காரணமாக மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது