தமிழகத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி மக்கள் வாக்களிக்கவில்லை என இந்தியத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. 17ஆவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவருகின்ற நிலையில் நேற்று முன்தினம் தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மக்களவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவை வலியுறுத்தித் தேர்தல் ஆணையகமும், அரசியல் கட்சிகளும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடுசெய்திருந்தன.
எனினும் தமிழகத்தில் 71.90 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ள இந்தியத் தேர்தல் ஆணையகம் இது கடந்த தேர்தலைக் காட்டிலும் குறைவான வாக்குப்பதிவாகும் எனத் தெரிவித்துள்ளது. கடந்த தேர்தலில் 73.68 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன.இது தவிர நடந்து முடிந்த 18சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 75.56 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது