228
ஜப்பானில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து ஏற்பட்ட விபத்தில் காரின் சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவரும் அவரது 2 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள இகேபுகுரோ மாவட்டத்தில் உள்ள சுரங்கப்பாதை புகையிரதநிலையம் அமைந்துள்ள வீதியில் நேற்று மதியம் பெருமளவிலான மக்கள் சென்று கொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த கார் மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து விபத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் 20 வயதான ஒரு பெண்ணும், அவரது 2 வயது பெண் குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் 8 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love