பல ஆண்டுகள் சித்ரவதை செய்தும், பட்டினி போட்டும் வளர்த்த பெற்றோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர்களது குழந்தைகள் பெற்றோரை மன்னித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். பெற்றோர் தங்களுக்கு இவ்வளவு கொடுமைகள் செய்திருந்தாலும், தங்களின் தாயையும், தந்தையையும் இன்னும் நேசிப்பதாக அவர்களது குழந்தைகள் தெரிவித்துள்ளனர்.
2018ம் ஆண்டு பெரிஸிலுள்ள அழுக்கடைந்த வீட்டில் இருந்து டேவிட் மற்றும் லூயிசி டர்பின் ஆகியோரின் 17 வயதான மகள் ஒருவர் தப்பிய பின், இந்த தம்பதியர் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒன்பது ஆண்டுகளாக தங்களின் 13 குழந்தைகளில் ஒருவரை தவிர ஏனையவரை மேசமாக நடத்தியதை இந்த தம்பதியர் ஒப்புக்கொண்டதனையடுத்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் நேற்று வெள்ளிக்கிழமை நரைடபெற்ற விசாரணையின் போது நான் jனது அப்பா, அம்மாவை பெரிதும் நேசிப்பதாக ஒரு குழந்தை எழுதியதை அவரது சகோதரர் நீதிமன்றத்தில் வாசித்தார். அவர்கள் தங்களை வளர்த்த முறை சிறந்தத்தாக இல்லாவிட்டாலும், இன்று தான் மனிதராக உருவாகுவதற்கு இந்த முறை காரணமானதால், மகிழ்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அவரது மற்றொரு சகோதரர் தனது கொடுமையான அனுபவத்தால் பெரும் துன்பமடைந்ததாகவும் அது கடந்த காலம் எனவும் இப்போது தான் தனது பெற்றோரை நேசிப்பதாகவும். அவர்கள் தனக்கு செய்ததை தான் மன்னித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளர். எனினும் அனைத்துக் குழந்தைகளும் பெற்றோரை மன்னிக்கும் இத்தகைய மனநிலையை பெற்றிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.