இலங்கை குண்டு வெடிப்பை தொடர்ந்து ராமேசுவரம் கோவில், தனுஷ்கோடி பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நேற்றையதினம் 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பில் 290 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதன் எதிரொலியாக தமிழக கடற்கரை பகுதியில் இந்திய கடற்படை பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளது.
குறிப்பாக இலங்கையில் இருந்து 20 கடல் மைல் தொலைவில் உள்ள ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளில் இந்திய கடற்படை, கடலோர காவல்படையினர் 24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து தீவிவாதிகள் பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவாமல் தடுப்பதற்காக இந்திய கடலோர காவல் படையினர் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகள் தீவிர சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது