154
யாழ்.மத்திய பேருந்து நிலையம் உட்பட்ட பகுதிகளில் பெருமளவான காவற்துறை விசேட அதிரடி படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய பேருந்து நிலையத்திற்கு வரும் சந்தேகத்திற்கு இடமானவர்களை அதிரடி படையினர் விசாரணை செய்வதுடன், சந்தேகத்திற்கு இடமான பொதிகளையும் பரிசோதனை செய்கின்றார்கள்.
அதேவேளை யாழ்.புறநகர் பகுதிகளில் உள்ள தேவாலயங்கள், மற்றும் பிரசித்தி பெற்ற இந்து ஆலயங்கள் என்பவற்றுக்கு அருகிலும் காவற்துறை பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு உள்ளனர்.
Spread the love