சோகத்தில் ஆழ்ந்தது கட்டுவாப்பிட்டிய ஆலயம் !
தற்கொலைத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களின் நல்லடக்க ஆரதனை வழிபாடுகள் இன்று நீர்கொடுழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் இடம்பெற்ற நிலையில் அப்பகுதியொங்கும் பெரும் சோகம் பரவிக்கிடக்கிறது..
கடந்த 21 ஆம் உயிர்ப்பு ஞாயிறு தினத்தை கிறிஸ்தவர்கள் தேவாலயங்களில் கொண்டாடி திருப்பலிப் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த வேளை, 3 தேவாலயங்களில் தற்கொலைத் தாக்குதல் மேற்கொற்கொள்ளப்பட்டது. இதில் இதுவரை 310 பேர் கொல்லப்பட்ட நிலையில் 500 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இந்நிலையில் நீர்கொழும்பு கட்டான கட்டுவாப்பிட்டிய சென். செபஸ்டியார் ஆலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோரின் இறுதி நல்லடக்க ஆராதனைகள் இன்று அதே தேவாலயத்தில் இடம்பெற்றது.
இதன் போது அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த ஆலயப் பகுதியெங்கும் மக்களின் கண்ணீரும், அழு குரல்களும் பரவிக்கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.