Home இலங்கை யாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை

யாழில் நைஜீரிய பிரஜைகள் இருவர் உட்பட 9 பேர் தடுத்து வைத்து விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழில். நைஜீரியா பிரஜைகள் இருவர் உட்பட ஒன்பது நபர்களை யாழ்ப்பாண காவல்துறையினர் காவல்நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

யாழ். நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கி இருந்தவர்களையே இன்று செவ்வாய்க்கிழமை மதியம் யாழ்.காவல் நிலையத்திற்கு அழைத்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் அவர்களின் ஆவணங்களையும் பரிசோதித்து வருகின்றனர்.

விசாரணைகளின் ஊடாக அவர்களின் ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்டு அவர்கள் மீது சந்தேகம் இல்லை என்பது உறுதியானால் அவர்களை விடுதலை செய்வோம் எனவும் , சந்தேகம் இருப்பின் அவர்களை நாளைய தினம் நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை நேற்றைய தினம் யாழ்.ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ள நபர் மீது சந்தேகம் உள்ளதாக அயலவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து இரவு அவ்வீட்டை சுற்றி வளைத்த காவல்துறையினர் வீட்டில் தேடுதல் நடத்தியதுடன் , வீட்டில் இருந்தவரையும் விசாரணைக்கு உட்படுத்தி இருந்தனர்.
இருந்த போதிலும் சந்தேகத்திற்கு இடமான முறையில் எவையும் இல்லை என்பதனை ; உறுதிப்படுத்திய பின்னர் அங்கிருந்து காவல்துறையினர் சென்றிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More