கீழ் வரும் செய்திக்கு அமைவாக கைது செய்யப்பட்ட நால்வரும் உயர்மட்ட அரசியல் அழுத்தங்களினால் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவ்வாறு விடவிக்கப்பட்டவர்களில் ஒருவரும் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் தற்கொலைதாரியாக செயற்பட்டதாக தகவல்கள் பெரவியுள்ளதாக, அமைச்சர் கபீர்காசிம் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறாயின் கைதானவர்கள் யார்? அரசியல் அழுத்தத்தை கொடுத்த முஸ்லீம் அமைச்சர்கள் அல்லது பிரமுகர்கள் யார்? இவர்களை விடுவிப்பதற்கு உத்தரவு பிறப்பித்தவர்கள் யார்? இவர்களே இந்த உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டும்.
இந்தச் செய்தி Jan 19, 2019 @ 06:04 வெளியானது
Jan 19, 2019 @ 06:04
புத்தளம், வனாத்திவில்லு, மங்களபுர, கரடிபுவல் பிரதேச தென்னை மர தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் மாவனல்லைப் பிரதேசத்தில் புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமையவே இந்த வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
கடந்த 17ம் திகதி வனாத்தவில்லு பிரதேசத்தில் தென்னை மர தோட்டத்தில் இருந்து சுமார் 100 கிலோ கிராம் எடையுடைய வெடிபொருட்கள், 100 டெட்டனேட்டர்களும் இரசாயன பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வனாத்திவில்லில், வெடிபொருட்களுடன் கைதான, 4 பேருக்கும் 90 நாள் தடுப்புக் காவல்…