குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நவாலி பிரசாத் லேனில் உள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை 16 தங்கநகைகள் திருடப்பட்டன என்று வீட்டு உரிமையாளரால் மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்படுள்ளது.
வீட்டில் உள்ள தம்பதியினர் வெளியில் சென்றிருந்த வேளை வீட்டின் சமையல் அறையில் உள்ள சிறிய யன்னலின் ஊடாக வீட்டுக்குள் நுழைந்த திருடர், படுக்கை அறை அலுமாரியில் இருந்த தாலிக்கொடி உள்ளிட்ட சுமார் 16 தங்கப் பவுண் நகைகளைத் திருடிக் கொண்டு தப்பித்துள்ளார்.
வீடு திரும்பிய தம்பதியினர் அலுமாரியில் உள்ளவை சிதறியுள்ளன என்பதை அவதானித்து நகைகளைத் தேடிய போது அவற்றைக் காணவில்லை. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வருகை தந்த காவல்துறையினர், விசாரணைகளை மேற்கொண்டனர்.