குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
துக்கதினத்தை அனுஸ்டிக்கும் முகமாக கறுப்பு கொடிகளை கட்டுவதற்கு நெல்லியடி காவல்துறையினர் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு , நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாகவும் , துக்க தினத்தை அனுஸ்டிக்கும் முகமாகவும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நெல்லியடி பகுதிகளில் சோக கீதங்கள் இசைக்கப்பட்டு , கறுப்பு கொடிகள் கட்டப்பட்டன.
அதன் போது அங்கு வந்திருந்த நெல்லியடி காவல்துரைறயினர் , கறுப்பு கொடிகளை கட்ட வேண்டாம் எனவும் , துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை கொடிகளை கட்டுமாறு கோரினார்கள். கறுப்புக்கொடிகள் அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுவது போன்று அமையும் எனவும் தெரிவித்திருந்தார்கள்.
அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் கறுப்பு கொடிகளை அகற்றி விட்டு வெள்ளை கொடிகளை கட்டினார்கள்.