இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேத்திலும், நேபாளத்திலும் இன்று அதிகாலை முதல் அடுத்தடுத்து நிலஅதிர்வுகள் உணரப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இன்று அதிகாலை 1.45 மணிக்கு ஏற்பட்ட 5.8-ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் சியாங்குக்கு மேற்கு பகுதியில் உணரப்பட் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திப்ருகார்க் மாவட்டத்திற்கு வடமேற்கில் 114 கி.மீ தூரத்தில் திபெத் எல்லைக்கு அருகே 40 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் திபெத்திலும் உணரப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.எனினும் இதுகுறித்த சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அதேவேளை நேபாளம் தலைநகர் காத்மாண்டுவிலும் இன்று காலை 6.14 மணிக்கு 4.8 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு உணரப்பட்டதாகவும்; தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள நவுபிஸிலும் அடுத்தடுத்து 5.2 மற்றும் 4.3 அளவுகளில் இரு நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது