குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு செல்லும் மக்கள் கடுமையான சோதனைகளின் பின்னரே நீதி மன்றுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் வைத்தியசாலைகள், அரச திணைக்களங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு செல்லும் மக்களின் பொதிகள் சோதனையிடப்பட்டே அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றுக்கும் செல்லும் மக்களும் அவர்களின் பொதிகளும் கடுமையாக சோதனையிடப்படுகிறது. பொது மக்கள் நீதி மன்றின் வாயிலில் நிறுத்தப்பட்டு சோதனையிடப்பட்டே நீதிமன்றிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.