பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறைமா மா அதிபர் ஆகியோரை தமது பதவிகளில் இருந்து விலகுமாறு செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு செயாலளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ மற்றும் காவற்துறைமா மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோரை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அறிவித்திருந்தும், இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அறிவிக்காமையின் காரணமாக பாரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
ஆகவே உடனடியாக காவற்துறை மா அதிபரையும், பாதுகாப்பு செயலாளரையும் கைதுசெய்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் முலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.